×

ஈரோட்டில் வக்கீல்கள் போராட்டம்

 

ஈரோடு, ஜூலை 6: ஜாக் அமைப்பின் தலைவர் மீது தமிழக பார் கவுன்சில் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை சட்ட விரோதமானது என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும், வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும். வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து, 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஈரோடு பார் அசோசியேசன் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் வக்கீல்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu Bar Council ,JACK ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்